maranathirkum melaanathu marakkapaduvathu
புதன், 30 நவம்பர், 2011
ஞாயிறு, 27 நவம்பர், 2011
காணாமப் போச்சு என் வுசுறு ஒன்னு..
வார்த்தையில வடிச்சிப்புட்டா
காகிதம் தான் அழுதிடுமோ..
ஒறவு ஒன்னு விட்டு போச்சு
என் ஒலகம் தான் நின்னுடுமோ..
பொட்ட புள்ள சிநேகிதம்
பொறந்த வீடு வரைக்கும்.
.
எட்டி நின்னு சொன்னவக
வாய்க்கு சக்கர இனிக்கும்..
வுசுரா பழகிய புள்ள ஒன்னு
ஒரவ வேணான்னு போச்சு
அவ ஓரக்க சொன்ன
வார்த்தை எல்லாம் ஊமையா ஆச்சு..
ஒரு தட்டுல தின்ன சோத்து ருசி
நாக்க விட்டு போகலையே..
அவ நெஞ்சினிக்க பேசிய பேச்சு
தொண்ட விட்டு நீங்கலையே.
. வுசுருக்குசுரா பழகுன பழக்கம்
காசு பணம் பிரிச்சிருச்சே
.. அவ உறவு தான் காணாத தூரமா
மல ஏறி போயிருச்சே..
பழகுனப்போ ஒரு வார்த்த சொல்லலையே..
அவ பிரிஞ்ச வெவரம்
என் வுசுருதான் தான்
இன்னும் நம்பலையே..
எனக்காத்தான் ஒன் வுசுருன்னு
எழுதாக் கொறையா நீ கேட்ட..
அத கண்டு கணக்கா கெடச்ச
காதல் கூட நான் பண்ணலையே.
. வாக்கப்பட்டு ஊரு தாண்டி
போறேன் நா மட்டும்.
. ஓன் வாசலுல வந்து கெடக்குதடி
என் நெனப்பு மட்டும்......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)